Sunday, July 15, 2007

புத்தகம் பற்றி

மறக்கப்பட்ட ஒருமாவீரன் கதை

``அஜிமுல்லா கான்’’ என்ற இந்த சிறிய வரலாற்று நூல் இந்திய சுதந்திரப் போராட் டத்தின் தொடக்க முனையான முதல் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகனின் கதை.1857ல் நடைபெற்ற இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சிப்பாய்க் கலகம் என்று சிறுமைப்படுத்தியது. மதசம்மந்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதிதான் இது என்று சாவர்க்கரின் மதவெறிக் கூட்டம் திரித்து கூறியது. இந்த வீரம் செரிந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் இஸ்லாம் மதத்தை சேர்ந்த அஜிமுல்லாகான் என்பதே இந்த காவிக் கூட்டத்தின் திரிபுவாதத்திற்கு காரணம் ஆகும். பிற்போக்கு வரலாற்றாளர்களால் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைக் ஒரு குறும்படத்தை போன்று விளக்கு கிறார் நூலாசிரியர் முத்துலட்சுமி.மத்திய பிரதேசத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஆர்.ஆர்.யாதவ் என்பவரால் வட இந்தியா முழுவதும் சென்று ஆராய்ந்து தொகுக்கப்பட்டதே நூலின் சுருக்கம்தான் இது. முதல் சுதந்திர போராட்டம் குறித்து இந்துத்துவ அமைப்பின் பொய்வாதத்தை ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் சார்ந்த வரான சத்யபால் படாயித் வன்மையாக மறுத்தார். உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதற்கு சான்றாகும். இந்த அரிய தகவல்களை வழங்கி தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கும் முத்து மீனாட்சி தனது பணியை சிறப்புடன் செய்திருக்கிறார். போராட்ட நிகழ்வுகளை வரிசையாக தொகுப்பதில் மூல நூல் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். கி.பி 1600ல் அக்பரின் இரக்க குணத்தை பயன்படுத்தி பிழைப்பு நடத்த வந்த வெள்ளையன் மில்டன் ஹால் மற்றும் அவனது ஆட்கள் கூடாரத்திற்குள் ஒண்டவந்த ஒட்டகமாய் இந்தியாவில் ஊடுருவினர்.1757ல் நடைபெற்ற பிளாசிப் போரில் கிழக்கிந்திய கம்பெனி கால்பரப்பியது. பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி ராஜாக்கள், நவாப்புகளிடையே கலகம் மூட்டி டில்லி, கல்கத்தா, கான்பூர் என அகலக்கால் வைத்து அதிலும் வென்றது.இந்தச் சூழ்நிலையில் 1820ல் நஜிமுல்லாவின் மகனாகப் பிறந்த அஜிமுல்லாகான் இருண்ட தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றினார். ஹில்டர்சன் என்ற ஆங்கிலேயே அதிகாரி யிடம் எடுபிடியாக தன் பணியை துவக்கிய அவர் ஆங்கிலேயே பள்ளி ஆசிரியராக உயர்ந்தார். வெள்ளையர்களின் கொடுமையை கண்டு சகிக்க முடியாது நாநாசாஹிப் துணையுடன் களத்தில் இறங்கி போராடினார்.சிதறிக்கிடந்த நெல்லிக் கனியாய் இருந்த ராஜாக்கள், நவாப்புகள், படைத்தலைவர்கள், வீரர்கள் ஆகியோரை ஒன்று சேர்க்கும் பணியில் பகதூர்ஷாவுடன் இணைந்து செயல்பட்டார். இதற்கிடையில் வாரிசு உரிமை சட்டத்தை அமலாக்கி பாஜிராவின் ராஜ்யத்தை வெள்ளை அரசு அபகரித்தது. நாகா சாஹிப்பை அவர் வாரிசாக அறிவித்ததை செல்லாது என கூறி நாடுகடத்தியது.பிரிட்டிஷ் அரசின் கொடுமை உச்சத்தை அடையவே அஜிமுல்லாகான், பகதூர்ஷா தலைமையில் கிராந்தி சங்கடன் என்ற அமைப்பை உருவாக்கினார். தாத்தியா தோபே, பாலசாஹிப், கான் சாஹிப், வாஜித் அலி ஷாஹ், பேகம் ஹஜரத் ஆகியோர் இணைந்து அன்று இந்துஸ்தான்படையை நிறுவி 1857ல் திட்டமிட்டு அடுத்தடுத்து தொடர்தாக்குல் நடத்தினர்.இந்த அதிரடித் தாக்குதலில் ஏராளமான ஆங்கிலேயேர்கள் கொல்லப்பட்டனர். இந்துஸ் தான் படைக்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிரிகள் பின் வாங்கினர். இறுதியில் அலஹாபாத் பிரிட்டிஷ் அதிகாரியின் நவீன ஆயுதப் படைகள் போர்க்களத்தில் இறக்கப்பட்டன. இந்துஸ்தான் படைவீரர்கள் அழிக்கப்பட்டனர். நாட்டுக்காக போராடிய மனநிறைவில் அஜிமுல்லாகான் கால மானார்.மறைக்கப்பட்ட ஒரு மாவீ ரனை அடையாளம் காட்டியுள்ள முத்து மீனாட்சிக்கு வசப்பட்டிருக் கிறது. எளிய தமிழ் வரிகள், அனைத்து தரப்பினரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளி மையான தமிழில் வடிவமைத்துள் ளார். இதுபோன்ற சிறிய மொழி பெயர்ப்புப் புடைப்புலகில் முத்து மீனாட்சியின் வரவு வசந்த கால அறிவிப்புதான்.
-ம.மீ.ஜாபர்
அஜிமுல்லாகான்ஆசிரியர்: முத்துமீனாட்சி,வெளியீடு: தி டீப் அறக்கட்டளை,14ஏ-சோலையப்பன் தெரு,சென்னை- 600 014.
பக்கம்-20 விலை 10 தொலைபேசி: 044 - 28341456

No comments: